பத்து மாசம் முடிஞ்சிதுன்னு
எட்டி ஒதச்சப்பவும்;
எம்புள்ள வெளையடுதுன்னு
துள்ளிக்குதிச்சவ -நீ.
கட்டாந்தரையில் படுத்திருந்தா
கட்டெறும்பு கடிக்குமுன்னு
பட்டினியா கெடந்தப்பவும்-
தொட்டில் வாங்கி கொடுத்தவ-நீ.
உன் நஞ்சிபோன சேலை பத்தி
ஒரு நாளும் நெனச்சதில்ல-நீ
சந்தைக்கு போகையிலே அவனுக்கு
சட்டை வாங்க மறந்ததில்ல.
பள்ளிகூடம் போய்வந்து -புள்ள
பசியோட நிக்குமுன்னு
பலகாரம் செஞ்சிதந்து
பசி போக்க துடிச்சவ-நீ
எப்படி சொல்லுவதம்மா- உம்புள்ள
கல்லூரி முடிச்ச கையோட-
ஒருத்திய கைபுடிச்ச கதையையும்;
உன்னக் கைவிட்ட கதையையும்.
கருவிழிகள் கரையுதடி-என்
கருவிழிகள் கரையுதடி
கால்வயித்து கஞ்சிக்காய்-நீ
கையேந்தி நிக்கயிலே....
-----------பிரபாகரன் நந்தன்------------